செய்திகள்

Update: மஹர சிறைச்சாலை வன்முறையில் 8 கைதிகள் பலி – 50 பேர் காயம்

மஹர சிறைச்சாலையில் நேற்று மாலை முதல் ஏற்பட்டுள்ள கலவரத்தில் 8 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் காயமடைந்துள்ளனர்.

சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் கைதிகள் பலர் நேற்று மாலை தப்பிச் செல்ல முயற்சித்த போது சிறைச்சாலை அதிகாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியாகியிருந்தார்.

பின்னர் அங்கு நிலைமை மோசமடைந்து கைதிகளுக்கிடையே வன்முறை வெடிக்க ஆரம்பித்துள்ளது.

இவ்வேளையில் கைதிகள் அங்கிருந்த கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை வரையில் விசேட அதிரடிப்படையினர் நிலைமையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை வரையில் கைதிகள் 8 பேரின் சடலங்கள் ராகம வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)