• TAMIL
  • SRI LANKA NEWS
  • TOP NEWS
  • LATEST NEWS
செய்திகள்

23 உள்ளுராட்சி சபைகளின் ஆயுட்காலம் 30ஆம் திகதியுடன் முடிகிறது

23 உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிர்வாக காலம் எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் அந்த சபைகளின் காலத்தை நீடிப்பதா இல்லையா என்பது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கூடி கலந்துரையாடவுள்ளதாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மேலும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை அடுத்த வருடம் முதல் அரையாண்டுக்குள் நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பைசர் முஸ்தப்பா தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏற்கனவே கடந்தவருடம் மார்ச் மாதத்துடன் 160ற்கும் மேற்பட்ட உள்ளுராட்சி சபைகளின் நிர்வாக காலம் முடிவடைந்த நிலையில் அவற்றின் காலத்தை சில மாதங்கள் வரை நீடித்து பின்னர் அவை கலைக்கப்பட்டு விசேட ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் அவை கொண்டுவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
n10