செய்திகள்

”2010 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் பொன்சேகாவுக்கு வாக்களித்தமையை எண்ணி வேதனையடைகின்றேன்” : செல்வம் எம்.பி

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஜனாதிபதியாகியிருந்தால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையை நினைத்துக் கூட பார்க்க முடியதளவுக்கு இருந்திருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
புரவி புயல் மாவீர் தின காலத்தில் வந்திருக்க வேண்டுமென்று பொன்சேகா தெரிவித்துள்ளார். அவரின் இந்தக் கருத்து மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகின்றது. இந்த எண்ணத்தில் இருப்பவருக்குமான் அன்று ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர் என்பதனை நினைக்கும் போது வேதனையாக இருக்கின்றது.
இவர் ஜனாதிபதியாக வந்திருந்தால் தமிழர்கள் படும் பாட்டை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இவர் விடுதலைப் புலிகளை எதிர்க்கலாம் ஆனால் இறந்த உறவுகளை நினைவு கூருவதை எதிர்க்க முடியாது. அது மக்களின் உரிமை என்றார். -(3)