செய்திகள்

20 வருடங்களின் பின்னர் நாட்டுக்குள் நுழையும் சூறாவளி!

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்க நிலைமை தற்போது சூறாவளியாக வலுப்பெற்று இலங்கை நோக்கி நகர்கின்றது.

இன்று இரவு அது இலங்கைக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் 20 வருடங்களின் பின்னரே இவ்வாறான சூறாவளி இலங்கையை ஊடறுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2000 ஆம் ஆண்டளவில் இதேபோன்ற சூறாவளியொன்று நாட்டை ஊடறுத்து பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதன்போது நாட்டில் சேதங்கள் ஏற்படுமென்று எதிர்வு கூறல்கள் கூறப்பட்ட போதும் அது கரையை கடந்து நாட்டை ஊரறுக்கும் போது பாரதூரமான சேதங்கள் ஏற்படுத்தவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)