20 ஆம் திருத்தம் மீது இன்று விவாதம் ஆரம்பம் – நாளை வாக்கெடுப்பு : 2/3 கிடைக்குமா?
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டம் மீதான விவாதம் இன்று ஆரம்பமாகவுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் அதில் இருந்து இரவு 7.30 மணி வரை இன்றைய விவாதம் நடக்கவுள்ளது.
பின்னர் நாளை காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் இரண்டாம் நாள் விவாதம் நடத்தபட்டு பின்னர் குழுநிலை ஆரம்பமாகவுள்ளது.
குழுநிலையின் போது அரசாங்கம் சட்டத் திருத்தத்தில் திருத்தங்களை முன்வைக்க உள்ளது.
நீதிமன்றத்தினால் சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நீக்கிக்கொள்ளவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாளை இரவு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதுடன் இதன்போது அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 149 பேரில் விஜயதாச ராஜபக்ச எதிர்த்து வாக்களிபில் கலந்துகொள்ள மாட்டார் என்று கூறப்படுகின்றது.
மேலும் எதிர்க்கட்சியில் சிலர் அரசாங்கத்துக்கு ஆதரவளித்து மூன்றில் இரண்டை பெற்றுக்கொடுக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. -(3)