செய்திகள்

16 நாட்களுக்கு செம்மஞ்சள் நிறத்தில் ஒளிரும் கொழும்பு தாமரைக் கோபுரம்

கொவிட் நிலைமை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஆகியன தொடர்பாக விழிப்புணர்வு வழங்கும் வகையில் கொழும்பு தாமரைக் கோபுரத்தை 16 நாட்களுக்கு செம்மஞ்சள் நிறத்தில் ஒளிரச் செய்ய நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், உலகெங்கிலும் உள்ள பிரசித்திபெற்ற கட்டிடங்கள் நவம்பர் 25 முதல் (பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச நாள்) முதல் டிசம்பர் 10 (மனித உரிமைகள் தினம்) வரை ‘பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான செயல்பாட்டின் 16 நாட்கள்’ உலகளாவிய பிரச்சாரத்தின் போது செம்மஞ்சள் நிறத்தில் ஒளியூட்டப்படுகின்றன.

இந்த 16 நாட்களில், அரசாங்கங்கள், ஐ.நா. முகவர் நிலையங்கள், சிவில் சமூகம் மற்றும் ஆர்வலர்கள் இந்த பிரச்சினையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒன்று கூடி வருகின்றனர்.

கொவிட் உலகில் வியாபிக்கும் முன்பே, பாலின அடிப்படையிலான வன்முறை ஏற்கனவே மிகப்பெரிய மனித உரிமை மீறல்களில் ஒன்றாகும். இருப்பினும், வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக உலகம் முழுவதும் நடமாட்ட முடக்கம் விதிக்கப்பட்டிருந்தாலும், இது மற்றொரு கொடிய நிழல் தொற்றுநோயான பாலின அடிப்படையிலான வன்முறையை வெளிக்கொண்டு வந்ததுடன் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான தற்போதைய ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

வீட்டு வன்முறையை அனுபவிக்கும் எண்ணற்ற பெண்கள், திடீரென்று அவர்களது வன்முறையாளர்களுடன் வீட்டிலேயே தங்கவைக்கப்பட்டனர். பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சேவைகள் மிகவும் தேவைப்படும் இந்த நேரத்தில், உயிர் காக்கும் பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதார சேவைகளுக்கான அணுகலை இது கடுமையாக பாதித்துள்ளதுடன் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு பதிலளிக்கும் உத்தியோகத்தர்களின் திறனையும் தடை செய்கிறது.

கொவிட்டை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார திட்டங்கள் விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய உதவிச் சேவைகள் மற்றும் அவசர அழைப்புச்சேவைகளுக்கு உதவியை நாடுபவர்களால் ஏற்படுத்தப்படும் அழைப்புக்களின் எண்ணிக்கையின் அதிகரிப்பு காரணமாக, பெண்களுக்கான அநேகமான தங்குமிடங்கள் அது கொள்ளக்கூடியளவிற்கு நிரம்பியுள்ளன. இருப்பினும் இது பனிப்பாறையின் முனையைப்போல சிறிதளவு மட்டுமே, பயம் மற்றும் களங்கத்தின் காரணமாக பல சம்பவங்கள் பதிவு செய்யப்படாமல் உள்ளது.

இந்த எண்ணிக்கை தொற்றுநோய் தொடருகையில், பெண்களின் உள ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு, அவர்களின் பாலியல் மற்றும் இனவிருத்தி சுகாதாரம் மற்றும் இனவிருத்தி உரிமைகள் மற்றும் இந் நெருக்கடியிலிருந்து மீள்வதில் பங்கேற்கும் திறன் ஆகியவற்றில் பலதரப்பட்ட தாக்கங்களை உருவாக்குவதற்கு வாய்ப்புள்ளது.

இந்த 16 நாட்கள் கொவிட்டின் இன் போது பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்களுக்காக, இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் ஆதரவுடன் இலங்கைக்கான ஊண்FPஆ இந்த நிழல் தொற்றுநோய்க்கு வெளிச்சம் கொடுப்பதற்கு தெற்காசியாவின் மிக உயரமான கட்டிடமான ‘தாமரை கோபுரத்திற்கு’செம்மஞ்சள் நிற ஒளியூட்டி ‘ஆரஞ்சு உலக பிரச்சாரத்தில்’ இணைந்தது.

இது அனைவருக்கும் பாதுகாப்பான உலகத்தை உருவாக்கும் முயற்சியில் முன்னணியாக திகழ்கின்ற சுகாதார பணியாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு நன்றி செலுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக உள்ள அதே நேரத்தில் தொற்றுநோய்களுக்கு மத்தியிலும் இந்த பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்க கொள்கை வகுப்பாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது, ஏனெனில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு வீடு பாதுகாப்பாக இல்லையென்றால் உலகம் வளர்ச்சியடைய முடியாது. இது எவரையும் பின்தள்ளி விடாத எங்கள் அர்ப்பணிப்பின் முக்கிய பகுதியாகும்.
-(3)