செய்திகள்

பொய் பிரசாரங்களை முன்னெடுக்கும் சமூக வலைத்தளங்களை தடை செய்ய நேரிடலாம் : ஜனாதிபதி

பொய் பிரசாரங்களை முன்னெடுக்கும் சமூக வலைத்தளங்களை தடை செய்வதற்கு நடவடிக்கையெடுப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வத்தளையில் இன்று நீதிமன்ற கட்டிடத்தொகுதியை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தேரிவித்துள்ளார்.
குற்றச் செயல்கள் தொடர்பாக கதைக்கும் போது கணனி மற்றும் கையடக்க தொலைபேசிகள் தொடர்பான குற்றச் செயல் அறிக்கையை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கின்றது. அதேவேளை தேசிய பிரச்சினைக்கும் இது காரணமாக இருக்கின்றது. சேரு பூசும் பொய் பிரசாரங்களும் நடக்கின்றன. இந்த நிலைமையில் அந்த சமூக வலைத்தள , இணையத்தள அமைப்புகளை அழைத்து வந்து இது தொடர்பாக கவனம் செலுத்தாவிட்டால் யார் எதிர்த்தாலும் அவ்வாறானவற்றை தடை செய்ய நேரிடுமென கூறியுள்ளேன். நல்ல விடயங்களுக்கு நாங்கள் எதிர்ப்பு இல்லை. என அவர் தெரிவித்துள்ளார். -(3)