செய்திகள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வார குருதிக்கொடை நிகழ்வுகள்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் பிரித்தானியாவில் மாவீரர் வாரத்தில் ” மாவீரர்களை நினைவு கூர்ந்து குருதிக் கொடை” என்ற எண்ணக்கருவில் குருதிக்கொடை நிகழ்வு வருடாவருடம் நடைபெற்று வருகின்றது.

கடந்த 25ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூக நலன் பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் தலைமையில் இவ்வாண்டுக்கான மாபெரும் குருதிக் கொடை நிகழ்வு பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் மேற்கொள்ளப்பட்டது.

புதன்கிழமை 8மணிமுதல் பிற்பகல் 4மணிவரை Bermuda Phoenix Centre. Coventry, CV10 7HU யிலும், சனிக்கிழமை 24/11/2018, நேரம் 9மணிமுதல் பிற்பகல் 4மணிவரை Luton Donor Centre, Luton, LU1 2NF இடத்திலும் ஞாயிற்றுக்கிழமை 25/11/2018 காலை 10மணிமுதல் மாலை 5மணிவரை Edgware Blood Donor Centre, Edgware, HA8 0AD; Tooting Blood Donor Centre, London, SW17 0RB மற்றும் Norfolk House Donor Centre, Manchester, M2 1DA ஆகிய இடங்களிலும் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன.

இன்று திங்கட்கிழமை 26/11/2018 தேசிய தலைவர் பிரபாகரனின் 64வது அகவையை கொண்டாடுமுகமாக, இன்று காலை 8.30மணிமுதல் மாலை 6.00மணிவரை Royal College of Nursing, 20 Cavendish Square, London, W1G 0RN என்ற இடத்திலும் குருதிக்கொடை நிகழ்வு நடைபெறுகின்றது.

இந்த நிகழ்வுகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் உட்பட ஏராளமான தேசிய செயற்பாட்டாளர்களும், பொதுமக்களும் இக் குருதித்தான நிகழ்வுகளில் கலந்துகொண்டனர்.

2 3