செய்திகள்

ஈழத்தின் பறவையினங்களில் ஒன்றான கௌதாரி: யாழ் காரைநகரில்…

கவுதாரி
අළු වටු කුකුළා
Grey Francolin at Karainagar, Jaffna, Sri Lanka

கவுதாரி அல்லது கௌதாரி எனப்படுபவை தெற்காசியாவில் வயல்வெளிகளிலும் புதர் மண்டிய இடங்களிலும் காணப்படும் பறவையினம். தவிட்டு நிற உடலில் கரு நிறக் கோடுகளை உடைய கோழியைப் போன்ற ஒரு வகைப் பறவை இது. இத்தகைய இடங்களில் இப்பறவைகள் காலையிலும் மாலையிலும் க-டீ-டர் … டீ-டர் என்ற கூப்பாடுடன் உரக்கக் கூவுவதைக் கேட்க முடியும். இவை இறைச்சிக்காக வேட்டையாடப்படும்.

கவர்பொருளாகப் பயன்படவிருக்கும் ஆண்

இனப்பெருக்க காலத்தில் ஆண் கவுதாரியின் இக்கூப்பாடு பிற ஆண்களையும் அழைக்கவல்லதால், அவற்றைப் பிடிக்க உதவும் கவர்பொருளாகவும் இது பயன்படுத்தப்படும்.

வேகமாகப் பறக்கவியலும் என்றாலும் பெரும்பாலும் பூமியிலேயே ஓடியாடும். அபாயம் ஏற்பட்டாலும் ஓடி ஒளிந்தே தப்ப முயலும். வேறு வழியில்லை என்றால் மட்டுமே பறக்கும்.

இப்பறவைகள் வாழும் இடங்களில் தரையில் தானியத்தினைத் தூவி வலை விரித்து வைத்து நரிக்குறவர்கள் அவற்றைப் பெருமளவில் பிடித்து சந்தைகளில் விற்பார்கள். வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் வந்த பின் இவற்றின் வியாபாரம் அவ்வளவு வெளிப்படையாக நடைபெறுவதில்லை. இவற்றின் மாமிசத்திற்காகவே இவை பிடிக்கப் படுகின்றன. இந்தப் பறவைகள் மனிதர்களைக் கண்டால் பயத்தில் ஓடி ஒளிந்திடும். பறக்கும் போது அதிக உயரத்தில் பறக்காது.இவை பறக்கும்போது புறாக்களைப் போன்றே பட படவென இறக்கைகள் அடிப்பதின் சத்தம் கேட்கும்.

N5