• TAMIL
  • SRI LANKA NEWS
  • TOP NEWS
  • LATEST NEWS
செய்திகள்

ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான ‘இருக்கை’: நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

உலகின் முன்னணி பல்கலைக்கழகமும் 380 வருட கால பாரம்பரிய பெருமை வாய்ந்ததுமான அமெரிக்காவின் ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு ஒரு இருக்கை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிற்காலங்களில் தோன்றியதும் குறைந்த எண்ணிக்கையான மக்களே பேசும் பல மொழிகளுக்கும் இந்த பல்கலைக்கழகத்தில் இருக்கை இருந்துவரும் நிலையில் உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழிக்கு ஒரு இருக்கை இல்லாது இருந்துவந்தது. பல தமிழ் அறிஞர்களின் பல வருட கால முயற்சியினால் தற்போது இந்த குறை நிவர்த்திசெய்யும் நிலைமை உருவாகி இருக்கிறது. இதன் மூலம் தமிழ் மொழியின் வளர்ச்சி, அதன் தொன்மை, பெருமைகள் பற்றிய சர்வதேச ரீதியான ஆய்வுகள் மற்றும் கற்கை ஆகியவற்றுக்கான பெரும் வாய்ப்பு ஏற்ப்பட்டுள்ளது.

இந்த இருக்கையை உறுதி நிரந்தரமாக உறுதி செய்வதற்காக 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வைப்பு செய்யவேண்டியிருக்கிறது. அமெரிக்காவில் வாழும் தமிழர்களான மருத்துவர்களான ஜானகி ராமன் மற்றும் திருஞானசம்பந்தம் ஆகியோர் 1 மில்லியன் டொலர்களை அளித்து இந்த இருக்கையை உறுதிசெய்துள்ளார்கள். இந்த முயற்சியில் மிகுதி 5 மில்லியன் டொலர்களை நேரடியாக இந்த நிதியத்துக்கு வழங்கி இந்த இருக்கையினை நிரந்தரமாக்கவேண்டி இருக்கிறது. இவ்வாறு இந்த இருக்கை நிரந்தரமாக உறுதிசெய்யப்படும் பட்சத்தில் இந்த இருக்கையுடன் தொடர்புடைய கற்றல் மற்றும் ஆய்வு செயற்பாடுகளுக்காக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெரும் செலவுகளை ஹவார்ட் பல்கலைக்கழகம் ஏற்றுக்கொள்ளும். ஆனால், இப்பொழுது உலகம் முழுவதிலும் வாழும் தமிழ் மக்களுக்கு இருக்கும் பொறுப்பு மிகுதி 5 மில்லியன் டொலர்களை வழங்குவதுதான்.

இந்த 5 மில்லியன் டொலர்களும் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்களிடம் இருந்து சிறு தொகைகளாக ஹவார்ட் பல்கலைக்கழகத்துக்கு சென்று சேர வேண்டும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் நாடு முதல் அமெரிக்க , கனடா வரை தமிழ் அறிஞர்களும், நலன்விரும்பிகளும் இதற்கான முயற்சிகளில் முழு மூச்சுடன் இறங்கி இருக்கிறார்கள். இந்தியாவில் தமிழ் மக்களிடம் இருந்து இதற்க்கான நிதியை சேகரிக்கும் நடவடிக்கைகளுக்கு ஊடகங்கள் தமது ஆதரவை வழங்கியுள்ளன. இந்த மகத்தான பணிக்கு ஈழத்தமிழ் மக்களும் தம்மால் இயன்றளவு நிதி உதவியினை வழங்கி பங்களிப்பு செய்வதுடன் ஈழத் தமில் இலக்கியம் ,படைப்புக்கள், ஆய்வுகள் மற்றும் போர்க்கால இலக்கியங்கள் என்பவற்றை ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் இந்த ‘இருக்கை’ மூலம் சர்வதேச அளவில் கொண்டுசெல்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.

உங்களால் முடிந்தளவு நிதி உதவியை கீழ்வரும் இணைய முகவரி ஊடாக இன்றே அனுப்பி வைத்து நீங்களும் செம்மொழியான தமிழ் மொழியின் வளர்சிக்கான ஒரு மகத்தான செயற்திட்டதின் பங்குதாரர்களாக ஆகுங்கள்.

தமிழுக்கு நன்கொடை அளிக்கும் வழி 1

தமிழுக்கு நன்கொடை அளிக்கும் வழி 2

ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கான இருக்கை ஏற்படுவதன் மூலம் தமிழ் மொழி, கலாசாரமும், புராதன இலக்கியம், பாரம்பரியம் ஆகியவற்றின் மேன்மைக்கான மிக திறமையான செயற்திட்டங்கள், ஆய்வுகளை முன்னெடுக்க முடிவதுடன், உலகின் முன்னணியும் பழமையும் மிக்கதுமான பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ் வளர்ச்சிக்கான ஒரு தொடர்பகத்தை ஏற்படுத்த முடியும்.

[youtube url=” https://www.youtube.com/watch?v=oxTP7QZZqYM” width=”500″ height=”300″]

[youtube url=” https://www.youtube.com/watch?v=ZZzm8qQxWqM” width=”500″ height=”300″]

[youtube url=” https://www.youtube.com/watch?v=6o_gE0J0nvI” width=”500″ height=”300″]

[youtube url=” https://www.youtube.com/watch?v=7HNtXB7YhX8″ width=”500″ height=”300″]

[youtube url=” https://www.youtube.com/watch?v=p_t1xmmRI3M” width=”500″ height=”300″]

[youtube url=” https://www.youtube.com/watch?v=HJJWlzBP1R4″ width=”500″ height=”300″]

[youtube url=” https://www.youtube.com/watch?v=KGtOA01cYI4″ width=”500″ height=”300″]

[youtube url=” https://www.youtube.com/watch?v=lgV22e4F_oY” width=”500″ height=”300″]