• TAMIL
  • SRI LANKA NEWS
  • TOP NEWS
  • LATEST NEWS
செய்திகள்

விசேட அதிரடிப் படையால் செயலிழக்கச் செய்யப்பட்டது 15 கிலோ எடையுள்ள புலிகளின் வெடிபொருள்

விசேட அதிரடிப்படையால் வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் மீட்கப்பட்ட 15 கிலோ எடையுள்ள விடுதலைப் புலிகளின் வெடிபொருள் செயலிழக்கச் செய்யப்பட்டது.

வவுனியா, உக்கிளாங்குளம், 04ஆம் ஒழுங்கையில் உள்ள ஒன்றை புதுவருடத்தை முன்னிட்டு துப்பரவு செய்யும் போது மண்னில் புதையுன்ட நிலையில் குறித்த 15 கிலோ நிறையுள்ள வெடிபொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து வீட்டின் உரிமையாளர் பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பண்டாரிக்குளம் பொலிஸார் மற்றும் வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வெடிபொருளை பார்வையிட்டதுடன், நீதிமன்ற அனுமதியினை பெற்று விசேட அதிரடி படையினரின் உதவியுடன் வெடிபொருளை செயல்லிழக்க செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்படி நீதிமன்ற உத்தரவுக்கமைய இன்று மதியம் அப்பகுதிக்கு வந்த விசேட அதிரடிப்படையினர் குறித்த வெடிபொருளை மீடு;டு வவுனியா பண்டாரிக்குளம் குளக்கட்டு பகுதியில் வைத்து அதனை செயலிழக்கச் செய்தனர்.

இதேவேளை, குறித்த வெடிபொருளில் கப்டன் பவான் (ஐயா) தகர்ப்பு வெடிமருந்தென பொறிக்கப்பட்டுள்ளதுடன், இது விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்டு இருக்கலாம் என நம்பப்படுகின்றது.

SAM_1298

N5