செய்திகள்

வட மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை மற்றும் நாளை மறுநாள் மூடப்படவுள்ளது

வடக்கு மாகாணத்தில் 4 மாவட்டங்களில் நாளையும் மறுநாளும் பாடசாலைகள் மூடப்படும் என்று மாகாண ஆளுநர், திருமதி சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.சீரற்ற காலநிலை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மாவட்டச் செயலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக வடக்கு மாகாண ஆளுநரால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளது.(15)