செய்திகள்

யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அவசர வேண்டுகோள்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாண சூழ்நிலை காரணமாக மக்களின் அவசர தேவைகளுக்கு, அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அவசர செயற்படுத்துகை மையத்தின் 24 மணிநேர தொலைபேசி இலக்கங்களான 0773957894 , 0212117117 எனும் இலக்கங்களுக்கு தொடர்பினை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிவித்தலை யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா விடுத்துள்ளார்.இதேவேளை 117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு ஏதேனும் அவசர தேவைகள் காணப்படுமாயின் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி உதவிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.(15)