செய்திகள்

யாழ் மாவட்டத்துக்கு செம்மஞ்சல் எச்சரிக்கை – மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம்

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை செம்மஞ்சல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவி பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.அத்தோடு மணித்தியாலத்திற்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் அபாயம் இருப்பதாகவும், மக்கள் அவதானமாக இருக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் தற்போது 38 இடைத்தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 959 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 393பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், 62 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 535 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீரற்ற காலநிலையால் யாழ் மாவட்டத்தில் தற்போதுவரை 17,243 குடும்பங்களை சேர்ந்த 57,513 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு நபர்கள் உயிரிழந்துள்ளதுடன், 6 நபர்கள் காயமடைந்துள்ளனர்.இந்நிலையில் இன்று காலை யாழ்ப்பாணத்தின் பல்வேறுபட்ட இடங்களில் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.பல கடைகள் மற்றும் வீடுகளிலுள் வெள்ளநீர் புகுந்துள்ளதுட்ன மக்கள் தங்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் செல்லும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.(15)