• TAMIL
  • SRI LANKA NEWS
  • TOP NEWS
  • LATEST NEWS
செய்திகள்

யாழ். மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராமங்கள் நாளை விடுவிப்பு

யாழ். மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராமங்கள் நாளை விடுவிக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.குறித்த கிராமங்களில் கொரோன நோயாளிகளுடன் தொடர்புடையோர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டதுடன் அந்தப் பகுதிகள் சுகாதாரத் துறையினரால் கண்காணிக்கப்பட்டு வந்தன.இந்த நிலையில் இக்கிராமங்களில் தொற்றாளர்கள் எவரும் கண்டறியப்படாத நிலையில் நாளை புதன்கிழமை தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பாசையூர் மேற்கு, திருநகர் மற்றும் வடமராட்சி – கரவெட்டி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இராஜகிராமம் ஆகிய கிராமங்களே 14 நாள்கள் தனிமைப்படுத்தலின் பின் நாளை விடுவிக்கப்படவுள்ளது.இக்கிராமங்களில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.(15)