செய்திகள்

யாழ். பருத்தித்துறை பகுதியில் வெள்ளத்தால் 100 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்.பருத்தித்துறை பகுதியில் வெள்ளத்தால் 100 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.அத்துடன் அப்பகுதியில் பாதிப்படைந்த மக்களுக்கு முதல் கட்டமாக இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ்.மாநகர சபை உறுப்பினருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன், மற்றும் அக்கட்சியின் மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் உள்ளிட்ட குழுவினர் சமைத்த உணவுகளை வழங்கினர்.அத்துடன் அவர்களது தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து மேலதிக உதவிகளை வழங்குவதாவும் உறுதி அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பருத்தித்துறை பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாக பாதிப்படைந்த நிலையில், சுமார் 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறி, உறவினர் வீடுகள், பொதுமண்டபங்கள், பொது இடங்களில் தங்கியுள்ளனர்.(15)3223032-640x480 12454554-640x480