செய்திகள்

யாழ்ப்பாணத்தின் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை தொடர் மழை பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின

யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை தொடக்கம் பல்வேறுபட்ட இடங்களில் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.நேற்று இரவு முதல் இன்று விடியும் வரை பொய்த இடைவிடாத மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையம் மற்றும் அதனை சூழ உள்ள பகுதிகள் மூழ்கியுள்ளன.புரேவி புயல் கடந்து சென்ற நிலையில் ஓயாத மழை நேற்று இரவு முதல் விடிய விடிய யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளிலும் இடைவிடாது பெய்துள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தின் பேருந்து நிலையம், பிரதான வீதிகள் மற்றுத் வர்த்தக நிலையங்கள் என அமைத்துமே வெள்ளதில் மூழ்கியுள்ளது. இதனால் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ளது.அத்துடன் அத்துடன் யாழ். நகரின் கரையோர கிராமங்கள் பலவும் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்காவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை நாடளாவிய ரீதியில் பரவலாக மழை பெய்து வருகின்றது. குறிப்பாக வடக்கில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளது.(15)download VideoCapture_20201205-092230-1024x473 VideoCapture_20201205-092233-1024x473 (1) VideoCapture_20201205-092233-1024x473 VideoCapture_20201205-092238-1024x473 VideoCapture_20201205-092242-1024x473