செய்திகள்
மாயன் இன மக்களின் மாபெரும் ‘கல்லறை’ கண்டுபிடிப்பு
தென் அமெரிக்காவில் வாழ்ந்த மிகப் பழமையான நாகரீகத்திற்குச் சொந்தக்காரர்களான மாயன் இனத்த வர்களின் மிகப்பெரிய கல்லறை நினைவுச் சின்னத்தைத் தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தென் அமெரிக்க பெலிஸில் தொல்லியல் அறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வின் பயனாக இந்த மாபெரும் கல்லறை நினைவுச் சின்னம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு பெலிஸில் உள்ள பழமையான ஷுனான்டுனிச் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட மாயன் இனத்தவரின் கோயிலின் கீழ், இருக்கும் ஒரு சுரங்கத்தினுள் இந்தக் கல்லறை அமைக்கப்பட்டுள்ளது.
கல்லறையை மறைக்கும் நோக்குடனேயே மேலே கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்தப் புதிய கண்டுபிடிப்பானது, ‘ நாக’ சாம்ராஜ்ய வம்சத்தை சேர்ந்த மாயன்களின் வரலாறு குறித்த ஆய்வில் புதிய ஒளியைப் பாய்ச்சும் என்று தொல்லியல் ஆய்வா ளர்கள் கருதுகின்றனர்.