செய்திகள்

மஹர சிறைச்சாலையில் தொடரும் பதற்றம் : இதுவரை 4 பேர் பலி!

மஹர சிறைச்சாலையில் இன்று மாலை முதல் நிலவி வரும் பதற்ற நிலைமை தொடரும் அதேவேளை அங்கு தீயும்ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அங்கு தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூட்டு சத்தங்கள் கேட்டுக்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சிறைச்சாலையில் இருந்து 4 சடலங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது சிறைச்சாலைக்கு முன்னால் கைதிகளின் உறவினர்கள் கூடியுள்ளதால் அந்தப் பகுதியில் பதற்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலை கைதிகள் பலர் சிறைச்சலையின் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்தபோது சிறைக் காவலர்கள் நடத்திய துபாக்கிச் சூட்டில் கைதி ஒருவர் பலியாகியுள்ளார்.

இதனை தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பதற்ற நிலமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.-(3)