செய்திகள்

மஹர சிறைச்சாலையில் அமைதியின்மை: துப்பாக்கி சூட்டில் கைதியொருவர் பலி!

மஹர சிறைச்சாலையில் இன்று மாலை ஏற்பட்ட அமைதியின்மையின் போது சிறைச்சாலை அதிகாரிகளினால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சிக்கி கைதியொருவர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் காயமடைந்துள்ளனர்.
சிறைச்சாலையில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வரும் நிலையில் கைதிகள் சிலர் தப்பிச் செல்ல முயற்சித்த போதே அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு நிலைமையை கட்டுப்படுத்த முயற்சிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை அங்கு மேலதிக பாதுகாப்புகளுக்காக விசேட அதிரடிப்படையினர் தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். -(3)