செய்திகள்
மத்துகமவில் 3 கிராமங்கள் முடக்கம்!
மத்துகம பிரதேச செயலக பிரிவில் ஓவிட்டிகல, பதுகம, மற்றும் பதுகம புதிய கிராமம் ஆகியன இன்று மாலை முதல் முடக்கப்பட்டுள்ளது.
இதுவரை அந்த பிரதேசத்தில் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த அந்த பிரதேசத்தை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கொவிட் தடுப்பு பிரிவு கூறியுள்ளது. -(3)