செய்திகள்

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை பிரபல பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரல்

5 ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களை அடுத்த வருடத்தில் 6 ஆம் தரத்திற்கு பிரபல பாடசாலைகளுக்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பங்களை பரீட்சைக்கு தோற்றிய பாடசாலை அதிபர்களிடமிருந்து பெற்று முறையாக அதனை பூரணப்படுத்தி எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அதனை அதிபர்களிடம் கையளிக்க நடவடிக்கையெடுக்குமாறு கல்வி அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
தற்போது கொவிட் தொற்றால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால், அதிபர்களுக்கு தெரியப்படுத்தி சம்பந்தப்பட்ட மாணவர்களுடன் அதிபர்களை தொடர்பு கொள்ள நடவடிக்கையெடுக்குமாறு கல்வி அமைச்சினால் வலயக் கல்வி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது. -(3)