செய்திகள்

புரவி புயல் திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையில் முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 7.10 மணிக்கு கரையை கடக்கும்

புரவி சூறாவளி திருகோணமலை மற்றும் பருத்தித்துறைக்கிடையிலான முல்லைத்தீவினை அண்மித்த கடற்பரப்பில் இன்று இரவு 7.10 இற்கு நாட்டிற்குள் பிரவேசிக்கும் என எதிர்பார்த்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதன் காரணமாக 80 – 90 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.இந்த சூறாவளி கிழக்கு கரையோரத்திலிருந்து மேற்கு நோக்கி மன்னார் வளைகுடாவினூடாக வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, புரேவி சூறாவளியின் காரணமாக இன்று வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் வட மேல் ஆகிய மாகாணங்களில் 200 மி.மீ. வரையான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.(15)