• TAMIL
  • SRI LANKA NEWS
  • TOP NEWS
  • LATEST NEWS
செய்திகள்

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை தீர்மானம்

நாட்டில் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக எதிர்வரும் வௌ்ளிக்கிழமை கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான செயலணியுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இதேவேளை பாடசாலைகள் மீள திறக்கப்படாவிடில் வீடுகளில் இருந்து மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு புதிய ஆலோசனை அறிக்கை ஒன்றை விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.மேலும் பாடசாலைகளை மீள திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளும் தாமதமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.(15)