செய்திகள்

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பதாக முறையான சுகாதார பாதுகாப்பு செயற்திட்டங்களைக் கல்வி அமை ச்சு மேற்கொள்ளவில்லை – இலங்கை ஆசிரியர் சங்கம்

நாட்டில் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி நட வடிக்கைக்காக முறையான சுகாதாரப் பாதுகாப்பு இல் லாமல் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீண்டும் மேற்கொள்ள கல்வி அமைச்சு எடுத்த தீர் மானத்தால் பல மாகாணங்களில் உள்ள பாடசாலைகள் மீண்டும் மூடப்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.கண்டி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொவிட் அச்சுறுத்தல் காரணமாக கண்டி மாவட்டத்திலுள்ள 45 பாடசாலைகள் இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப் பட்டுள்ளது என இலங்கை ஆசிரியர் சங் கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு முன்பதாக முறையான சுகாதார பாதுகாப்பு செயற்திட்டங்களைக் கல்வி அமை ச்சு மேற்கொள்ளவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.பாடசாலைகளில் சுகாதாரப் பாதுகாப்பு குறித்துப் பல பிரச்சினைகள் எழுந்துள்ளன என்றும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.(15)