செய்திகள்

பஸ் கட்டணம் 3 முதல் 6 வீதம் வரை அதிகரிக்கும் : நுகர்வோர் உரிமைகள் அமைப்பு இணங்கியது

3 வீதத்திலிருந்து 6 வீதம் வரை பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

பஸ் கட்டணத்தை அதிகரிப்பதன் ஊடாக சிறந்த சேவையொன்றை வழங்க முடியும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.அத்துடன் பஸ் ஒன்றில் ஏற்றக்கூடிய அளவான பயணிகளை மாத்திரமே ஏற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக தீர்மானமெடுக்கப்படவுள்ளது.

N5