செய்திகள்
பழைய முறையில் மாகாண சபை தேர்தல்?
மாகாண சபைகளுக்கான தேர்தலை பழைய முறையில் நடத்துவதற்கு அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய முறையில் தேர்தலை நடத்ததுவதற்கு ஏற்கனவே தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஏற்பட்ட சிக்கல் நிலைமைகளை கருத்திற்கொண்டு பழைய முறையில் நடத்துவதற்கு ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக நேற்று நடைபெற்ற விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அடுத்த கூட்டம் நடைபெறவுள்ளது. -(3)