செய்திகள்
நேற்றய தொடர் மழை காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையின் சில விடுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
சீரற்ற காலநிலை காரணமாக நேற்றையதினம் பெய்த தொடர்மழையினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் ஒருபகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக தனது முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளார்.இதேவேளை யாழ் நகரில் சரியான வடிகாலமைப்பு வசதியின்மையால் இவ்வாறு வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும், எதிர்காலத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி மேலும் தெரிவித்தார்.அத்துடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எடுத்து எதிர்வரும் காலங்களில் இவ்வாறான அனர்த்தம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(15)