செய்திகள்

நிவர் புயலால் தமிழகத்தில் மூவர் பலி – மீனவர்கள் பலரை காணவில்லை

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் கரையைக் கடந்துள்ள நிலையில் அதனால் ஏற்பட்ட அனர்த்தங்களால் தமிழகத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட 227000 ற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
புயலால் 101 குடிசைகள் சேதமடைந்துள்ளதோடு, 380 மரங்கள் சரிந்து விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தமிழகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் பலரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
32 மீனவர்கள் வரையில் இதுவரையில் காணாமல் போயுள்ளதாகவே தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்றது. -(3)