செய்திகள்

நாட்டில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது

நாட்டில் மேலும் 342 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21ஆயிரத்தைக் கடந்து 21 ஆயிரத்து 811ஆக அதிகரித்துள்ளது.அத்துடன் மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 18ஆயிரத்தைக் கடந்து 18 ஆயிரத்து 280ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை இன்று தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)