செய்திகள்
தபால் வேலை நிறுத்தம் தொடர்கிறது : கடும் நெருக்கடிக்குள் தபால் திணைக்களம்
தபால் சேவை ஊழியர்களினால் கடந்த இரண்டு வார காலமாக முன்னெடுத்து வரும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தால் நாடு பூராகவும் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தபால் நிலையங்களில் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பல கோடி ரூபா நஷ்டத்தை தபால் திணைக்களம் எதிர்நோக்க வேண்டி வந்துள்ளது.
அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருமளவு கடிதங்கள் தேங்கிக் கிடப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமது கோரிக்கைகளுக்கு இன்னும் அரசாங்கம் தீர்வை முன்வைக்காத காரணத்தினால் தமது வேலை நிறுத்தப் போராட்டத்துடன் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. -(3)