• TAMIL
  • SRI LANKA NEWS
  • TOP NEWS
  • LATEST NEWS
செய்திகள்

டெங்கு காய்ச்சல் எப்படி பரவுகிறது?

டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் ஏடிஸ் நுளம்புகள் நல்ல தண்ணீரில் உற்பத்தியாகக்கூடியது. 3 வாரங்கள் உயிர் வாழும் இந்த நுளம்புகள் நல்ல தண்ணீரில் நூற்றுக்கணக்கான முட்டைகளை இட்டு இனப்பெருக்கம் செய்கிறது. இந்த கொசுக்கள் பகலில் கடிக்கும் தன்மையுடையது.

டெங்கு காய்ச்சல் என்பது டெங்கு வைரஸ் கிருமியால் ஏற்படக்கூடியது. டயர், பயன்படுத்தாத உடைந்த சிமெண்ட் தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாத தொட்டிகள் போன்றவற்றில் தேங்கும் நீரில் உருவாகும் ஏடிஸ் நுளம்புகள் டெங்கு வைரசுடன் உருவாகிறது. இந்த கொசுக்கள் கடிக்கும் போது டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது.201709200814327140_How-to-prevent-dengue-fever_SECVPF

டெங்கு காய்ச்சல் உள்ளவரை கடித்த ஏடிஸ் நுளம்புகள்ஆரோக்கியமானவர்களை கடிக்கும் போது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது.காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல்வலி, வாந்தி, எலும்புவலி ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறிகளாகும். ரத்த தட்டு அணுக்கள் ரத்தம் உறைவதற்கு மிக முக்கியமான காரணியாகும். டெங்கு வைரஸ் ரத்தத் தட்டு அணுக்களை அழித்து விடும் தன்மை உடையது. ரத்த தட்டுக்கள் எண்ணிக்கை குறையும் போது, அது நுரையீரல், வயிறு போன்ற உறுப்புகளிலும் பல் ஈறு, சிறுநீர் பாதையிலும் ரத்தக் கசிவை ஏற்படுத்த கூடும். உரிய மருத்துவ சிகிச்சை பெறவில்லை என்றால் உயிர் இழப்புக்கூட நேரிடலாம்.

சாதாரணமாக ஏற்படும் சளி, காய்ச்சல் தானாக ஓரிரு நாட்களில் குணமாகிவிடும். ஆனால் மலேரியா, எலி காய்ச்சல், டெங்கு, டைபாய்டு காய்ச்சலுக்கு உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சை தாமதமானாலோ, சுயமாக மருந்துகள் சாப்பிட்டால் உடல் நலம் கடுமையாக பாதிக்க நேரிடும்.Dengue_fever_symptoms_tamil

எனவே காய்ச்சல் கண்டவுடன் வைத்தியரிடம் சென்று முறையான சிகிச்சை பெற வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி ரத்த பரிசோதனை செய்ய வேண்டும்.உரிய சிகிச்சையும், முறையான கவனிப்பும் இருந்தால் டெங்கு காய்ச்சலை எளிதாக குணப்படுத்தலாம். டெங்கு காய்ச்சல் உடலில் நீர் சத்தை குறைத்துவிடும். உப்பு சேர்த்த கஞ்சி, இளநீர் போன்றவை தேவையான அளவு கொடுக்க வேண்டும்.

காய்ச்சல் நின்ற பிறகு 3 நாட்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பசி எடுக்கவில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ மீண்டும் வைத்தியரிடம் பரிசோதிக்க வேண்டும். பகலிலும் சிறு குழந்தைகளை நுளம்பு வலைக்குள் தூங்க வைப்போம். தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை நன்றாக தேய்த்து கழுவி நுளம்பு புகாதவாறு மூடி வைக்க வேண்டும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து டெங்குவை ஒழிப்போம்.(15)