• TAMIL
  • SRI LANKA NEWS
  • TOP NEWS
  • LATEST NEWS
செய்திகள்

சிலாபத்தில் மீனவர் ஒருவருக்கு கொரோனா – படகொன்றில் 6 பேர் தனிமைப்படுத்தலில்

சிலாபம், அம்பகதவில பிரதேசத்தில் கொரொனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் 28 வயதுடைய மீனவர் என தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னர் தொற்றுக்கு உள்ளதான அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் நெருக்கமான தொடர்புகளை பேணிய ஒருவரே இவ்வாறாக தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்.
இவர் கடந்த 30 ஆம் திகதி நுவரெலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் கடந்த 8 ஆம் திகதி மீனவர்கள் 6 பேருடன் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும் இவருக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டவர் ஊடாக கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய கடலுக்கு சென்றவரை கரைக்கு அழைத்து பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
இதேவேளை அவருடன் மீன்பிடிக்க சென்ற மற்றைய மீனவர்கள் படகொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.