செய்திகள்

சிறைச்சாலை கொரோனா கொத்தணி தொற்றாளர் எண்ணிக்கை 1000 ஐ கடந்தது

இலங்கையின் சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 1091 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகமானோர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்தே அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கிருந்து 386 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
அத்துடன் மஹர, பூசா, குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளில் இருந்தும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
1033 பேர் கைதிகளுக்கும், 58 சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இதுவரையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. -(3)