செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை தினம் தொடர்பாக 10 நாட்களில் தீர்மானிக்கப்படும் : கல்வி அமைச்சர்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஜனவரி 18 ஆம் திகதி திட்டமிட்டவாறு ஆரம்பிப்பதா? இல்லையா? என்பது தொடர்பாக எதிர்வரும் 10 நாட்களில் தீர்மானம் எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தற்போது மேல் மாகாணத்தில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் சாதாரண தர வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாகவும் இதன்படி இன்னும் 10 நாட்களில் பரீட்சை தினம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். -(3)