• TAMIL
  • SRI LANKA NEWS
  • TOP NEWS
  • LATEST NEWS
செய்திகள்

கொள்ளுப்பிட்டியில் 55 பேருக்கு கொரோனா!

கொழும்பு கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 55 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 430 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 251 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் அவர்களில் 55 பேர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டவர்கள் என்று தொற்று நோய் ஆய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை கொழும்பு புளுமென்டல் பகுதியில் 4 பேரும், தெமட்டகொடவில் 17 பேரும், கிரேண்ட்பாஸஜல் 32 பேரும், கொசல்வத்தையில் 25 பேரும், மாளிகாவத்தையில் 20 பேரும், மருதானையில் 20 பேரும், கோட்டையில் 28 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். -(3)