செய்திகள்

கொரோனா: மேலும் 7 மரணங்கள் பதிவு!

கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 116ஆகும்.

01. கொழும்பு 02 பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான பெண் ஆவார். கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் இந்த வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் 2020 நவம்பர் மாதம் 28ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானமை மற்றும் நாள்பட்ட நுரையீரல் நோய் நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

02. கொதட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான ஆண் நபர். 2020 நவம்பர் மாதம் 27ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் தொற்றுடன் நிமோனியா ,நாள்பட்ட நுரையீரல் நோய் மற்றும் நீரிழிவு நோய் அதிகரித்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

03. மொரட்டு பிரதேசத்தைச் சேர்ந்த 73 வயதான ஆண் நபர் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்டு சிகிச்சைப்பெற்ற வந்த நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் 2020 நவம்பர் மாதம் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதினால் அதிகரித்த நிமோனியா நோய் நிலையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

04. சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான ஆண் நபர். சிலாபம் ஆதார வைத்தியசாலையில் 2020 நவம்பர் மாதம் 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நீரிழிவு, அதியுயர் இரத்த அழுத்தத்துடன் கொவிட் 19 நிமோனியா ஏற்பட்டமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

05. அக்குரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான பெண் ஆவார். கராபிட்டிய போதனா வைத்தியசாலையிலிருந்து கொவிட் 19 தொற்றக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் 2020 நவம்பர் மாதம் 27ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் நாள்பட்ட நீரிழிவு நோயுடன் கொவிட் 19 நிமோனியா நிலை ஏற்பட்டமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

06. கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 90 வயதான பெண் ஆவார். கொவிட் 19 தொற்றக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளானமையினால் ஏற்பட்ட நிமோனியா நோய் நிலைமை ஆகும்.

07. மருதானை பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண் நபர். 2020 நவம்பர் மாதம் 27ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்று நிலைமையுடன் நுரையீரல் செயலிழந்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-(3)