• TAMIL
  • SRI LANKA NEWS
  • TOP NEWS
  • LATEST NEWS
செய்திகள்

கொரோனா: இன்று 627 பேருக்கு தொற்று – 5 பேர் மரணம்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 627 பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 26,037 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 129 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 85 மற்றும் 71 வயதுடைய இரண்டு ஆண்களும் கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 89 வயதுடைய ஆண் ஒருவரும், கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் கொழும்பு 02 பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார். -(3)