கெரில்லாப் போரிற்கு தயாராகிவரும் ஐ. எஸ் அமைப்பு
ரொய்ட்டர்- தமிழில் சமகளம்
மௌசூலில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் ஐஎஸ் அமைப்பு தன்னை கெரில்லாப்போரிற்கு தயார்படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில மாதங்களிற்கு முன்னரே ஐஎஸ் அமைப்பு தனது போர்வடிவத்தை மாற்றுவதற்கு தீர்மானித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐஎஸ் அமைப்பின் உறுப்பினர்களும் தளபதிகளும் மௌசூலில் இருந்து வெளியேறி ஹம்ரின் பகுதிக்கு பெருமளவில் செல்வதை சில மாதங்களிற்கு சில மாதங்களிற்கு முன்னர் அவதானித்துள்ளதாக புலனாய்வு பிரிவினரும் உள்ளுர் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
ஹம்ரின் மலைப்பகுதியிலேயே ஐஎஸ் அமைப்பின் மறைவிடங்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இங்கிருந்து ஈராக்கின் நான்கு மாகாணங்களிற்கும் செல்ல முடியும்.
சில தீவிரவாதிகளை இடைமறிக்க முயன்றது எனினும் பலர் ஹம்ரின் பகுதிக்கு தப்பிச்சென்று அங்கு தங்கள் தளங்களை ஏற்படுத்தியுள்ளனர் என ஈராக்கிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக மௌசூல் வெற்றியை கொண்டாடி முடித்த பின்னர் ஈராக்கிய படையினர் மிகவும் கடுமையான குழப்பமான சவாலை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். இதன் காரணமாக 2003 இல் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு பின்னர் அல்ஹைடா முன்னெடுத்த மிகவும் ஆபத்தான கிளர்ச்சிபோன்ற ஓன்றை எதிர்கொள்வதற்கு இராணுவ அதிகாரிகள் தயாராகிவருகின்றனர்.
அவர்கள் பின்வாங்கி தங்களை தயார்படுத்துகி;ன்றனர் அவர்களால் ஈராக் தலைநகரை இலகுவான அணுகமுடியும் என குர்திஸ் இனத்தை சேர்ந்த பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் ஓருவர் தெரிவித்துள்ளார்.
மிகவும் கடுமையான நாட்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஈராக்கில் நாளாந்தம் நிகழ்ந்த அல்ஹைடாவின் கார்க்குண்டு வெடிப்புகள் மற்றும் தற்கொலை குண்டுதாக்குதல்களுடன் ஐஎஸ் அமைப்பின் சில உறுப்பினர்களிற்கு தொடர்புள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் முயற்சியால் ஈராக்கில் தோற்கடிக்கப்பட்ட அல்ஹைடா சிரியா ஈராக் எல்லையில் மீண்டும் புதுப்பிறவியெடுத்து உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது- அதுவே ஐஎஸ் அமைப்பாகும்.
இதன் பின்னர் மின்னல்வேக தாக்குதலில் மௌசூலை கைப்பற்றிய ஐஎஸ் அதன் ஈவிரக்கமற்ற தன்மையில் அல்ஹைடாவை தோற்கடித்தது. தலைதுண்டிப்புகள் படுகொலைகள் மூலம் தனது அதிதீவிரகொள்கையை நிறுவியது.அல்ஹைடா போல அல்லாமல் ஈராக்கின் நிலத்தோற்றம் குறித்து ஐஎஸ் அமைப்பு நன்கு அறிந்துள்ளது. ஈராக்கின் முன்னாள் இராணுவ அதிகாரிகள் பலர் அந்த அமைப்பில் உள்ளதும் அதற்கு சாதகமாகவுள்ளது.
சதாமின் புலனாய்வு அதிகாரிகள்
முன்னர் சதாமின் கீழ் பணிபுரிந்த புலனாய்வு அதிகாரிகள் ஐஎஸ் அமைப்புடன் இணைந்துகொண்டனர். இவர்களே ஐஎஸ் அமைப்பின் புதிய தலைவர்களாக விளங்கப்போகின்றனர் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஐஎஸ் அமைப்பு இனி வரும் காலங்களில் கெரில்லா யுத்தத்தில் கவனம் செலுத்தும் என இராணு அதிகாரிகளும் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர்.
ஈராக்கிய படையினர் தற்போது மிகவும் வலுவானவர்களாக மாறியுள்ள போதிலும் அவர்களால் கெரில்லா யுத்தத்தை எதிர்கொள்ள முடியுமா என்பதே முக்கிய கேள்வியாக உள்ளது.
ஸீலீப்பர் செல்களையும் சிறிய குழுக்களையும் கொண்டியங்கப்போகும் ஐஎஸ் அமைப்பினர் பாலைவனங்கள் மற்றும் மலைகளில் இருந்து தீடிரென தோன்றி தாக்குதல்களை மேற்கொண்டுவிட்டு மறைந்துவிடுவார்கள் என அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அவர்கள் மக்கள் மத்தியில் மறைந்திருக்க முயல்வார்கள் அவர்களின் சிறிய குழுக்களின் எண்ணிக்கை குறையும் என அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார்.
ஈராக்கிய படையினர் ஏதோ ஓரு கட்டத்தில் இவ்வகையான தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் இதனை அடிப்படையாக வைத்து அவர்களிற்கு பயிற்சி வழங்க தயாராகிவிட்டோம் என அமெரிக்க அதிகாரியொருவர் குறிப்பிடுகின்றார்.
ஆனால் வரலாறு பயிற்சி மாத்திரம் போதுமானதல்ல என்பதை உணர்த்திநிற்கின்றது.