செய்திகள்

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 300யை கடந்தது

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 300யை கடந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்துள்ளார்.இதனடிப்படையில் கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 303யை கடந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, தொடர்ச்சியாக தனிமைப்படுத்தல் சட்டங்களையும் சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றுமாறு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன், மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அக்கரைப்பற்று பொதுச்சந்தையுடன் தொடர்புபட்டவர்களில், இதுவரை 156 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை நேற்று வியாழக்கிழமை மாலை, அட்டாளைச்சேனையில் 13பேரும் அக்கரைப்பற்றில் 6பேரும் ஆலையடிவேம்பில் 2பேரும் திருக்கோவில் மற்றும் கல்முனை தெற்கு ஆகியவற்றில் தலா ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அழகையா லதாகரன் கூறியுள்ளார்.(15)