செய்திகள்
கரு பிரதமராக பதவியேற்பாரா?
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்படுமாக இருந்தால் உடனடியாக சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதமராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியும் தற்போது ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.
எதிர்வரும் 4ஆம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. இதன்போது அதனை வெற்றிப் பெறச் செய்வதற்கான முழு முயற்சிகளில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)