செய்திகள்

கண்டி நகரில் பாடசாலைகளுக்கான விடுமுறை நீடிப்பு : போகம்பரை கிராமம் தனிமைப்படுத்தப்பட்டது!

கொரோனா தொற்று நிலைமையால் கண்டி நகர எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மேலும் ஒரு வார காலத்திற்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ.கமகே தெரிவித்துள்ளார்.
இதன்படி கண்டி நகர சபை எல்லைக்கு உட்பட்ட 45 பாடசாலைகளும், அகுரணை பிரதேசசத்தில் 5 பாடசாலைகளும் எதிர்வரும் 14 ஆம் திகதி வரையில் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று மாலை 6 மணி முதல் கண்டி நகரில் போகம்பரை பிரதேசத்தை தனிமைப்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)