செய்திகள்

கட்டு நாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தின் பார்வையாளர் அரங்கு இன்று மீண்டும் திறக்கப்பட்டது

கட்டு நாயக்க விமான நிலையத்தின் வெளியேறும் முனையத்தின் பொதுமக்களுக்கான பார்வையாளர் அரங்கு இன்று 5 ஆம் திகதி காலை மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.இதேவேளை கட்டாய தனிமைப்படுத்தல் செய்முறைக்கு உட்படுத்தப்பட்ட காரணத்தால் விமான நிலையத்தின் வரியற்ற வர்த்தக தொகுதியில் அமைந்துள்ள விற்பனை நிலையங்களில் பொருட்களை வாங்க முடியாமல் போன விமான பயணிகளுக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் நிறைவடைந்த நாள் முதல் ஒரு மாதக்காலத்திற்கு விமான நிலையத்திற்கு வருகை தந்து அங்குள்ள வரியற்ற விற்பனை நிலையங்களில் பொருட்களை வாங்கிச் செல்ல வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை சுகாதார பிரிவினரால் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக ஒரு விமான பயணிக்குப் பார்வையாளர் அரங்கிற்கு ஒரு நபரை மாத்திரம் அழைத்துச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)