செய்திகள்

ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக வாழ விரும்பும் தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் – சிவாஜிலிங்கம் வேண்டுகோள்

ஒரே நாட்டினுள் ஒற்றுமையாக வாழவே தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். எனவே தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்காமல் நீங்கள் ஆளுபவர்கள், தமிழர்கள் அடிமைகள் எனும் மனநிலையில் இருந்து மாறுங்கள் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட ஆட்சியாளர்களிடம் சொல்ல விரும்புவது, தமிழர்களின் உரிமைகளை தடுக்கும் உரிமை உங்களுக்கு இல்லை. எனவே நாங்கள் நினைவேந்தல் செய்வதற்கு இடையூறு விளைவிக்காது இருக்க வேண்டும்.அத்துடன் எந்த அரசாங்கத்தினாலும் தமிழ் மக்களின் நினைவேந்தும் உரிமையை தடுக்க முடியாது என ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவிக்கும்போதே எம்.கே.சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)