செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய செயலாளர்

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக ஷாமல் செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் செயலாளராக பதவி வகித்த முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரிசவசம் பதவி விலகியதை தொடர்ந்து அந்த இடத்திற்கு வடமேல் மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரான ஷாமல் செனரத்தை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய செயலாளரை நியமிக்க முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து ஷமல் செனரத் பதவியெற்றுள்ளார். -(3)