எதிர்வரும் காலங்களிலும் சபாநாயகர் பதவியில் தொடரவுள்ளேன்- கரு ஜயசூரிய
சபாநாயகர் கரு ஜயசூரிய அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மஹாநாயக்க தேரர்களை இன்று சந்தித்து ஆசி பெற்றுக் கொண்டுள்ளார்.விசேடமாக நான் இன்றைய தினம் மஹாநாயக்க தேரர்களை சந்தித்து நாட்டில் இனரீதியாக முன்னேடுக்கும் சில பிரச்சினைகள் குறித்து ஆலோசித்தேன்.மேலும் நாட்டின் தற்போதைய நிலவரம் குறித்தும் ஆராய்ந்தோம்.நாட்டின் அபிவிருத்தியையே நாம் விரும்புகிறோம். ஜனநாயகம் அனைவருக்கும் தேவைப்படுகின்றதெனவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது மல்வத்து பீடத்தின் மஹாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மஹாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்னதேரரையும் சந்தித்து ஆசிப் பெறுக்கொண்டுள்ளார்.இதனையடுத்து சபாநாயகர் கரு ஜயசூரிய நாபானே பிரேமசிறி தேரரையும் சந்தித்துள்ளார்.மேலும், அங்கு வருகைத் தந்திருந்த ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட சபாநாயகர்,எதிர்வரும் காலங்களிலும் தான் சபாநாயகர் பதவியில் தொடரவுள்ளேன் என தெரிவித்தார்.(15)