செய்திகள்

இலங்கையில் கொரோனா: இதுவரை 27,000 பேருக்கு தொற்று – 20,000 பேர் குணமடைவு

கொரோனா தொற்றுக்கு உள்ளான 501 பேர் இன்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இன்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களில் 319 பேர் பேலியாகொட மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் 182 பேர் சிறைச்சாலைகளில் இருந்து அடையாளம் காணப்பட்டவர்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்படி இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 27,060 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் கடந்த இரண்டு மாதங்களாக தொடரும் இரண்டாவது கொரோனா அலையின் ஊடாக தொற்றுக்கு உள்ளாவர்களின் எண்ணிக்கை 23,506 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து இதுவரையில் 20,090 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறப்பிடத்தக்கது. -(3)