செய்திகள்

இலங்கைக்கு தென்கிழக்கு திசையின் இந்து சமுத்திரத்தில் நில நடுக்கம்

ஹம்பாந்தோட்டையிலிருந்து 240 கிலோமீற்றருக்கு தொலைவில், தென்கிழக்கு கடற்பிராந்தியந்தில் நில அதிர்வு பதிவாகியதாக தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.10 கிலோமீற்றர் கடல் பாறைக்குள் ஏற்பட்டுள்ள இந்த நில அதிர்வால் இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மாத்தறை மற்றும் அம்பலன்கொட ஆகிய பகுதிகளில் இந்த நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்று புதன்கிழமை அதிகாலை 2.34 மணியளவில் 5.4 ரிக்டர் அளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.(15)