அரசாங்கத்தினால் சுதந்திரக் கட்சியினருக்கு பிரச்சினை ஏற்படுத்தப்பட்டால் மகிந்த அணியில் இணைவோம் : அமைச்சர் சொய்சா
அரசாங்கத்தினால் சுதந்திரக் கட்சியினருக்கு பிரச்சினைகள் ஏற்படுமாகவிருந்தால் தாம் மஹிந்த ஆதரவு அணியுடன் கைகோர்த்து செயற்பட தயாராக இருப்பதாக அமைச்சர் விஜித் விஜித முனி சொய்சா தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் வரவு செலவுத்திட்ட விவாதத்தில் காணி அமைச்சு மீதான குழு நிலை விவாதத்தில் மஹிந்த ஆதரவு அணி முக்கியஸ்தரான மஹிந்தானந்த அலுத்கமகே நல்லாட்சியில் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களுக்கு எதிராக பல்வேறு ஒடுக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டி இது ஜ.தே.க அரசாங்கமல்ல.சுதந்திரக்கட்சியும் இணைந்த அரசாங்கம் இதற்கு அனுமதிக்க முடியாது.ஆளும் தரப்பிலுள்ள சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் இதனை அனுமதிக்கின்றனரா? என கேட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன் போது அமைச்சர் விஜித முனித சொய்சா , அவ்வாறு ஏதும் பிரச்சினை இருந்தால் அதனை அனுமதிக்க முடியாது. உங்களுடன் கைகோர்த்து செயற்பட நாம் தயார்.சு.க ஆதரவாளர்களை தாக்குவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார். -(3)