செய்திகள்

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் வர்த்தமானியுடன் நின்று விடுகின்றதே தவிர மக்களுக்கு கிடைப்பதில்லை – அனுரகுமார திசாநாயக்க

தேசிய உற்பத்தியை பலப்படுத்துவோம் என அரசாங்கம் கூறினாலும் அதற்கான வரிக் கொள்கையொன்று நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.மக்களுக்கு தரமான நுகர்வுப் பொருட்களை பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் ஆட்சி செய்கின்றது.அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் வர்த்தமானியுடன் நின்று விடுகின்றதே தவிர மக்களுக்கு கிடைப்பதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.இந்த ஆண்டு நெல் உற்பத்தியில் அதிக விளைச்சல் கண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், அரிசிக்கான நிர்ணய விலையை கொடுக்க முடியவில்லை.இன்னமும் எமது மக்கள், குறைந்த விலையில் அரிசியைக்கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் என இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)